வேலூர் ஜெயிலில் நளினியுடன் முருகன் சந்திப்பு: ஜீவ சமாதி குறித்து பேசினார்

வேலூர் ஜெயிலில் நளினியுடன் முருகன் சந்திப்பு: ஜீவ சமாதி குறித்து பேசினார்

வேலூர் ஜெயிலில் நளினியுடன் முருகன் சந்தித்து பேசினார். அப்போது ஜீவ சமாதி அடைவது குறித்தும், மகளின் திருமணம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Published on

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலிலும், இதே வழக்கில் தண்டனை பெற்ற அவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும், கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசி வருகிறார்கள்.

அதன்படி, இன்று காலை 7.45 மணி முதல் 8.15 மணி வரை நளினி -முருகன் சந்திப்பு நடந்தது.

ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீசார், ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பலத்த பாதுகாப்புடன், பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அரை மணி நேரம் நளினியுடன் முருகன் பேசினார்.

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டதையடுத்து ஜெயிலிலேயே ஜீவ சமாதி அடைவது குறித்தும், மகளின் திருமணம் குறித்தும் மனைவி நளினியுடன் முருகன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com