வேலூர் மாவட்டம் முழுவதும் ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு

வேலூர் மாவட்டம் முழுவதும் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். #CashCrunch
வேலூர் மாவட்டம் முழுவதும் ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆம்பூர், வாணியம் பாடி மற்றும் திருப்பத்தூர், குடியாத்தம், காட்பாடி ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் என மாவட்டம் முழுவதும் பல்வேறு ஏ.டி.எம்களில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது.

ஒருசில தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம்களில் மட்டுமே பணம் இருப்பதால், பொதுமக்கள் பணம் எடுக்க முண்டியடிக்கின்றனர். பணத்தட்டுப்பாட்டால் பல ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com