செய்திகள்
வெள்ளிச்சந்தை அருகே தூக்குபோட்டு பூசாரி தற்கொலை
வெள்ளிச்சந்தை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த பூசாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
வெள்ளிச்சந்தை தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). பூசாரி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மனைவி பிரிந்து வாழ்கிறார். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த மணிகண்டன் சம்பவத்தன்று மருச்சினி குளக்கரையின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

