

திருச்சி மாவட்டம் முசிறி எம்.எல்.ஏ. செல்வராஜ் இல்ல திருமண விழா இன்று முசிறியில் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலம் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்க தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஜெயலலலிதாவின் ஆன்மா இதனை நிச்சயம் மன்னிக்காது. அவர் கீழ்ப்பாக்கம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டுமல்ல, எதையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார், சமாளிப்பார், வெற்றியும் பெறுவார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தை மறைத்து ஓட்டு கேட்டது ஏன்? ஆட்சி, அதிகாரம் அனைத்திலும் செல்வாக்கை இழந்த தினகரன் இன்று அ.தி.மு.க. நிர்வாகிகளை நீக்கம் செய்வது சரியல்லை. முடிந்தால் என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.