

வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே முல்லை நகரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது வீட்டில் 8 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு இருந்துள்ளது. பாம்பு இருந்ததை பார்த்த துரைசாமி ஓடினார்.
பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து பாம்பை விரட்டினார். ஆனால் பாம்பு வெளியே செல்லவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் (பொ) சுந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் குச்சியால் பாம்பை பிடித்து சாக்கு பைக்குள் போட்டு பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். #tamilnews