பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

வேலாயுதம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகனாந்த வடிவேல் தலைமையிலான போலீசார் வேலாயுதம்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, வேலாயுதம்பாளையத்தில் உள்ள பிரியாணி கடையின் மேல் மாடியில் பணம் வைத்து சூதாடியதாக அண்ணா நகரை சேர்ந்த பொன்னுசாமி (வயது 43), கடைவீதி பகுதியை சேர்ந்த ரவி (50) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com