வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற வாலிபர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகிதபுரம் மூலிமங்கலம் பகுதியில் மது விற்கப்படுவதாக, வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூலிமங்கலத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்த மணிமுத்து (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com