வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற 3 பேர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மது விற்றதாக காதப்பாறை காந்திநகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 54), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் நொய்யல் புன்னம்சத்திரம் அருகே அதியமான் கோட்டையில் மதுவிற்ற வேலாயுதம்பாளையம் திருவள்ளுவர் நகர் 2-வது தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com