வேளச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பிரியாணி கடை மாஸ்டர் பலி

வேளச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பிரியாணி கடை மாஸ்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

வேளச்சேரி:

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அஜி ஜில்கான் (35). இவர் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் உள்ள பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை அஜி ஜில் கான் தனது சைக்கிளில் வேளச்சேரி மெயின் ரோடு வழியாக பள்ளிக்கரணை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கைவேலி அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜி ஜில் கான் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வேளச்சேரி விநாயகபுரம் ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்த ஹேமந்த்குமாரும் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தனர் மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹேமந்த்குமார் சித்தாலபாக்கத்தில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com