வேளச்சேரி-கடற்கரை பறக்கும் ரெயிலில் என்ஜின் கோளாறு

வேளச்சேரி-கடற்கரை பறக்கும் ரெயிலில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
வேளச்சேரி-கடற்கரை பறக்கும் ரெயிலில் என்ஜின் கோளாறு
Published on

சென்னை:

சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயிலில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் அதிகளவு பயணம் செய்கின்றனர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள், கல்லூரி மாணவர்கள் நிறைந்து காணப்படுவார்கள்.

இன்று காலை 8.30 மணியளவில் வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி வந்த பறக்கும் ரெயில் தரமணி ரெயில் நிலையத்தில் நின்றது.

அங்கிருந்து புறப்பட வேண்டிய ரெயில் புறப்பட வில்லை. என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

‘பீக் அவர்சில்’ திடீரென பறக்கும் ரெயில் நின்றதால் பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டனர். தொழில் நுட்ப வல்லுனர்கள் விரைந்து வந்து பார்த்தனர். ஆனாலும் என்ஜினை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்து வேறு வழியின்றி பாதியில் இறங்கி சென்றனர். பின்னர் டீசல் என்ஜின் கொண்டு வரப்பட்டு பழுதான என்ஜினை பெட்டியோடு இழுத்துக் கொண்டு பணிமனைக்கு சென்றது. இதன் காரணமாக வேளச்சேரி- கடற்கரை இடையே சேவை பாதிக்கப்பட்டது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com