ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாகனங்களுக்கும் பதிவு எண்

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, வாகனங்களிலும் பொதுமக்களின் வாகனங்களை போல் பதிவு எண் விரைவில் நடைமுறைக்கு வரும் என டெல்லி ஐகோர்ட்டு கூறியுள்ளது.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாகனங்களுக்கும் பதிவு எண்
Published on

இந்திய அரசியல் அமைப்பின் மூத்த அதிகாரிகளான ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்களின் வாகனங்களிலும் பொதுமக்களின் வாகனங்களை போல் பதிவு எண் இருக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் பொதுமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி(பொறுப்பு) கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் எழுத்து வடிவில் வாக்குமூலம் அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com