கடத்தூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலி

கடத்தூர் அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடத்தூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலி
Published on

கடத்தூர்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (54). விவசாயியான இவர்  தனது சொந்த வேலை காரணமாக கடத்தூரில் இருந்து தனது டூவிலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  தேக்கல்நாயக்கன்பட்டி கிராமம் அருகே சென்ற போது இவர் மீது எதிராக பூக்கள் ஏற்றி கொண்டு வேகமாக வந்த வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடத்தூர் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்த ரேகடஅள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com