திருத்தணியில் வாகனம் மோதி மாணவர் பலி

திருத்தணியில் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 10ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் பலியான பள்ளி மாணவர்.
விபத்தில் பலியான பள்ளி மாணவர்.
Published on

திருத்தணி:

திருத்தணி அடுத்த முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசாருதீன் (15).

திருத்தணியில் உள்ள டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

அசாருதீன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததனர். அப்போது பின்னால் வந்த தனியார் பள்ளி வாகனம் மாணவ- மாணவிகளை ஏற்றி கொண்டு ம.பொ.சி. சாலையில் வந்து கொண்டிருந்தது.

திடீரென்று எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் பின்பக்கத்தில் மோதியது. இதில் அசாருதீன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com