கோவில்பட்டியில் வாகனம் மோதி மூதாட்டி பலி

கோவில்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து (கோப்புப்படம்)
விபத்து (கோப்புப்படம்)
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி திலகர்நகரை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 66). மாடசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து கிருஷ்ணம்மாள் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்ப்பதற்காக தனது உறவினர்களுடன் கிருஷ்ணம்மாள் சென்னைக்கு சென்றார். பின்னர் மீண்டும் இன்று அதிகாலை சென்னையில் இருந்து கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கிருஷ்ணம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை ஓட்டியவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com