அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

கிருமாம்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

பாகூர்:

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவர் கடலூரில் உள்ள கைக்கடிகார கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு இவர் கிருமாம்பாக்கம் அருகே முள்ளோடைக்கு வந்தார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சரவணனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com