

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசீராமணி அருகே உள்ள ஜமீன் இளம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீரங்காயி (வயது 75). இவர் நேற்று வீட்டிற்கு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள் திருச்செங்கோடு- ஜேடர்பாளையம் மெயின் ரோட்டை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி சீரங்காயை பொதுமக்கள் மீட்டு நாமக்கல் தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews