தொடர் மழையால் காய்கறிகள் விலை உயர்ந்தது

சென்னையில் தொடர் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன.
தொடர் மழையால் காய்கறிகள் விலை உயர்ந்தது
Published on

சென்னை:

சென்னையில் தொடர் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன. மழையால் சென்னைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக விலை படிப்படியாக உயர்ந்துள்ளது.

கிலோ ரூ.20-க்கு விற்ற முட்டைகோஸ் தற்போது ரூ.45-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.50-க்கும், ரூ.90-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.140 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

மேலும் கேரட், முருங்கைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளும் இன்றைக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை அதிகரித்துள்ளது.

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்தது. பொதுமக்கள் வெளியே வராததால் காய்கறி விற்பனை கடுமையாக பாதித்துள்ளது. தெருவோர கடைகளும் திறக்கப்படாததால் காய்கறி விற்பனை கடுமையாக சரிந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள வியாபாரிகள் மழையால் மார்க்கெட்டுக்கு செல்லவில்லை. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு வாரமாக விற்பனை மந்தமாக உள்ளது. விற்பனை குறைவாக இருந்தாலும் விலை குறையவில்லை

இதுகுறித்து கோயம்பேடு வியாபாரி சங்க ஆலோசகர் சவுந்தர்ராஜன் கூறுகையில், சந்தைக்கு தினமும் 320 லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. மழையின் காரணமாக 200 லாரிகள் அளவுக்கே காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைந்ததாலும் கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com