

இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதில் போட்டிக்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆகியோர் பீட்சா, பர்க்கர் சாப்பிட்டதால்தான் இப்படி ஆனது என தகவல் புகைப்படத்துடன் வெளியானது. இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது.
எனக்கு தெரிந்தவரை சிறுவர்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு துரித உணவுகள் கொடுப்பது தீங்கானது. உங்களுக்கும் தெரிந்திருக்கும்’ என பதிவிட்டிருந்தார்.
To know when they sleep,wake up and eat ..
thank you for your concern though .. means a lot ✌🏽 https://t.co/R4lXSm794B
மற்றவர்களை காட்டிலும் என் மகனை நான் கவனமாக பராமரித்து வருகிறேன். மேலும் நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீஷியன் அல்ல. அவர்களுக்கு நான் தாயோ, ஆசிரியரோ அல்ல என்பதை உணருங்கள்.
அவர்கள் எப்போது விழிப்பார்கள், சாப்பிடுவார்கள், தூங்குவார்கள் என தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறைக்கு நன்றி’ என கூறியுள்ளார்.