வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ரேவதி (வயது46). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி சம்பவத்தன்று அண்டர் காட்ட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு, உறவினர் அஜீத்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது மழை பெய்ததால் குடை பிடித்தபடி அமர்ந்து சென்றுள்ளார். இதில் காற்றி குடை பறந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

பின்னர் மேல் சிகிக்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பொருப்பு சுபாஷ் சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com