வேடசந்தூர் ஓட்டலில் பயங்கர தீ விபத்து

வேடசந்தூர் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.
வேடசந்தூர் ஓட்டலில் பயங்கர தீ விபத்து
Published on

வேடசந்தூர்:

வேடசந்தூர் ஆத்து மேடு பகுதியில் சாலையோர ஓட்டல் உள்ளது. இங்கு வழக்கம் போல் ஊழியர்கள் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை கவனிக்காததால் திடீரென தீ பற்றி மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டல் ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் நாசமானது. விரைவாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அக்கம் பக்கத்திலும் ஏராளமான கடைகள் உள்ள நிலையில் தீ பரவாததால் அதிர்ஷ்டவசமாக பொருட் சேதம் ஏற்படவில்லை.

சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உணவகத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com