

விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள வத்திராயிருப்பு அருகே உள்ள ஆகாசம்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் ரகு (வயது 27). முதுகலை பட்டதாரி.
இவர் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். கடந்த 11-ந் தேதி நடைபெற்ற எழுத்து தேர்விலும் பங்கேற்றார். ஆனால் அதனை சரியாக எழுதவில்லை என வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார்.
இதனால் கடந்த 2 நாட்களாக ரகு மன வேதனையில் இருந்தார். மேலும் அடுத்து அறிவிக்கப்படும் தேர்வை எழுத தனக்கு வயது வரம்பு முடிந்து விடும் எனக்கூறியும் கவலைப்பட்டார்.
இந்த வேதனையில் இருந்த ரகு, வீட்டு முன்பு இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். வத்திராயிருப்பு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews