வத்தலக்குண்டுவை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது- 27 பவுன் நகைகள் பறிமுதல்

வத்தலக்குண்டுவை கலக்கி வந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகில் உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்த வீரமணி மகன் மணிமுருகன். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் விலாசம் கேட்பது போல வந்து பணம் கேட்டு மிரட்டினார்.

பணம் தர மறுக்கவே கத்தியை காட்டி அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.300 பணத்தை பறித்துக் கொண்டு ஓடினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன், சப்-இன்ஸ் பெக்டர் கலையரசன் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பாப்பனூரை சேர்ந்த பெருமாள் மகன் கோவிந்தராஜ் என தெரியவந்தது. இவர் கோயம்புத்தூரை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் கடந்த ஆண்டு வத்தலக்குண்டு நோக்கி பஸ்சில் வந்தபோது அவரிடம் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்தார்.

மேலும் வத்தலக்குண்டு திருநகரை சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 11-ந் தேதி 7 பவுன் நகைகளை கொள்ளையடித்தார். போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் வழிப்பறி வழக்கில் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கோவிந்தராஜை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com