ராஜஸ்தான் இடைத்தேர்தலில் தோல்வி: பா.ஜனதா தொண்டர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் - வசுந்தரா

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் தோல்வி தொடர்பாக முதல்- மந்திரி வசுந்தரா ராஜே, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். #Vasundhara Raje #BJP
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் தோல்வி: பா.ஜனதா தொண்டர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் - வசுந்தரா
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி படுதோல்வியை தழுவியது.

இரண்டு எம்.பி. தொகுதியிலும், ஒரு எம்.எல்.ஏ. தொகுதியிலும் அந்த கட்சி தோற்றது.

ஆல்வன் எம்.பி. தொகுதியில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 496 வாக்குகள் வித்தியாசத்திலும், அஜ்மீர் எம்.பி. தொகுதியில் 88,144 ஓட்டுகள் வித்தியாசத்திலும், மண்டல்கர் எம்.எல்.ஏ. தொகுதியில் 12,976 ஓட்டுகள் வித்தியாசத்திலும் தோற்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் இடைத்தேர்தல் தோல்வி பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது கருதப்படுகிறது. அதே நேரத்தில் பா.ஜனதா மேலிடம் அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளது.

இதற்கிடையே இடைத்தேர்தலில் தோல்வி தொடர்பாக ராஜஸ்தான் முதல்- மந்திரி வசுந்தரா ராஜே, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முதல்- மந்திரி பேசியதாவது:-

இடைத்தேர்தல் தோல்வி யால் பா.ஜனதா தொண்டர் கள் விழித்துக் கொள்வது அவசியமாகும். அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப் புணர்வை ஏற்படுத்த வேண் டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய மந்திரி ராஜேந்தர ரத்கோஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

இதற்கிடையே இடைத் தேர்தல் தோல்வி தொடர்பாக முதல்- மந்திரி வசுந்தரா பதவி விலக வேண்டும் என்று ராஜஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ்வர்ருடி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது. தோல்விக்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் முதல்- மந்திரி பதவி விலக வேண் டும்” என்றார். #Vasundhara Raje #BJP #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com