உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் பொறுப்பேற்றார்

இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹர்ஷ் வர்தன்
ஹர்ஷ் வர்தன்
Published on

ஐ..நா.-வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், மே 22-ம்தேதி பதவியேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குவார். இந்த குழு ஆண்டுக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் செயல் திட்டங்களுக்கு இந்த குழு பரிந்துரை வழங்கும். ஹர்ஷ் வர்தன் 3 ஆண்டு காலம் இந்த பதவியில் நீடிப்பார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com