

ஜோலார்பேட்டை:
வாணியம்பாடியை அடுத்த கோணமேடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 மகன்கள்
உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் பாஸ்கர் தன் வீட்டருகே உள்ள தண்டவாளத்தை கடக்கும் போது சரக்கு ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.