வந்தவாசி அருகே மகள் கண் முன்பு தந்தைக்கு கத்திகுத்து- தொழிலாளி கைது

வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் மகள் கண்ணெதிரே தந்தையை கத்தியால் வெட்டிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி அருகே மகள் கண் முன்பு தந்தைக்கு கத்திகுத்து- தொழிலாளி கைது
Published on

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 52) தனியார் கம்பெனியில் வேலை செய்யும் இவரது மகள் ரஞ்சிதா (19) என்பவரை நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கூட்ரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஜெயின் கோவில் அருகே சென்ற போது பின்னால் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் (55) (கூலித் தொழிலாளி) என்பவர் ரஞ்சிதா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். பின்னால் துரத்தி சென்ற ஜீவா ஏன் எனது மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்கின்றாய் என கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜீவாவை மறைத்து வைத்திருந்த கத்தியால் உலகநாதன் வெட்டியுள்ளார்.

மேலும் உலகநாதனுக்கு ஆதரவாக அவரது மகன் அஜித்குமார் (19) என்பவர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஜீவா வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஜீவா வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜித்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com