வந்தவாசியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

வந்தவாசியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வந்தவாசி:

வந்தவாசி தாலுகா அம்மையப்பட்டு கிராமம் சன்னதி தெருவில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாடி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மும்முனி கிராமத்தை சேர்ந்த நாராயணன் (வயது 46), முருகன் (35), சீனிவாசன் (31), ராமச்சந்திரன் (50) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.67 ஆயிரம் மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் வந்தவாசி பைபாஸ் ரோட்டில் உள்ள நெற்களம் அருகில் சூதாடிக் கொண்டிருந்த வந்தவாசியை சேர்ந்த பஷீர் (56), மஜித் (67) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரம் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com