வாணரப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

வாணரப்பேட்டையில் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணரப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 41). ஆட்டோ டிரைவர். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஆரோக்கியசாமிக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆட்டோ தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

கணவர் வேலைக்கு செல்ல முடியாததால் சாந்தா ஓட்டலில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இது, ஆரோக்கியசாமிக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் விபத்தினால் ஏற்பட்ட கால் முறிவால் அவதியும் அடைந்து வந்தார். இதனால் மனமுடைந்த ஆரோக்கியசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com