லத்தேரி அருகே லாரி - வேன் மோதல் காட்பாடி வாலிபர் பலி

லத்தேரி அருகே லாரி மீது கோழி வேன் மோதியதில் காட்பாடி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
லத்தேரி அருகே லாரி - வேன் மோதல் காட்பாடி வாலிபர் பலி
Published on

வேலூர்:

காட்பாடி விருதம்பட்டு மசூதி தெருவை சேர்ந்த வடிவேல் மகன் மதன் (வயது19) கிளீனராக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை கே.வி. குப்பத்தில் இருந்து வேனில் கோழிகளை ஏற்றி வந்தனர். வேனில் மதன் அமர்ந்திருந்தார்.

லத்தேரி மெயின் ரோட்டில் திருமண மண்டபம் அருகே உள்ள வளைவில் திரும்பிய போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியது.

இந்த விபத்தில் வேன் முன்பகுதி நொறுங்கியது. மதன் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேன் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

லத்தேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த டிரைவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com