வேன் மீது லாரி மோதல்: டிரைவர் பலி

சேலம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

சேலம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40). டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு வேனில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, வேன் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராமன் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com