

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள பாலதிருப்பதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(32). வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். திருமணமான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக வேதனையில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த ராஜேஷ்குமார் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நகர்மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள பிரவான்பட்டியை சேர்ந்தவர் விஜயன்(32). குழந்தை இல்லாத ஏக்கத்தில் மிகுந்த வேதனையில் இருந்து வந்தார். இதனால் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.