திருவையாறு அருகே ரோட்டில் வேன் கவிழ்ந்து 40 தொழிலாளர்கள் படுகாயம்

திருவையாறு அருகே இன்று காலை ரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருவையாறு அருகே ரோட்டில் வேன் கவிழ்ந்து 40 தொழிலாளர்கள் படுகாயம்
Published on

திருவையாறு:

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பரதூரை சேர்ந்த 40 விவசாய தொழிலாளர்கள் இன்று காலை திருவையாறுக்கு வேலைக்கு செல்ல ஒரு வேனில் புறப்பட்டனர். கரைவெட்டி பரதூர் கிராமம் திருவையாறுக்கு அருகில் உள்ளது. இதனால் இவர்கள் தினமும் வாகனங்களில் திருவையாறுக்கு வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.

இதேபோல் இன்று காலையும் சுமார் 40 பேர் வேனில் திருவையாறுக்கு வந்து கொண்டிருந்தபோது கஸ்தூரிபாய் நகரில் அருகில் சாலையின் குறுக்கே ஒரு நாய் திடீரென ஓடியதால் வேன் டிரைவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதில் வேன் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது வேனில் இருந்த 40 பேரும் வேனுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் 10 பேர் மட்டும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com