தாராபுரம் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 3 பெண்கள் பலி

தாராபுரம் அருகே பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துள்ளானதில் 3 பெண்கள் பலியானார்கள்.
தாராபுரம் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 3 பெண்கள் பலி
Published on

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது.

இந்த கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி, கோடங்கிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

அவர்கள் தினமும் காலையில் வேனில் வேலைக்கு வருவது வழக்கம். அது போல் இன்று காலை ஒரு வேனில் ஆண்கள், பெண்கள் என 38 பேர் வேலைக்கு வந்தனர்.

இந்த வேன் தாராபுரம்- ஒட்டன் சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு கல் மீது ஏறி வேனின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் வேன் நடுரோட்டில் தலை குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

அவர்களில் கோடங்கிபட்டியை சேர்ந்த பாப்பாத்தி (50), ரேவதி (37) புளியம்பட்டி குமரன் மனைவி பார்வதி (38) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

வேனில் இருந்த 36 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 6 பேர் பழனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com