விபத்து
விபத்து

வல்லத்தில் கார் மோதி மூதாட்டி படுகாயம்

வல்லத்தில் கார் மோதி மூதாட்டி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆரோக்யதாஸ் இவரது மனைவி வியாகுலமேரி (வயது 80). சம்பவத்தன்று இவர் வல்லம்-தஞ்சை சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக தஞ்சையில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று வியாகுலமேரி மீது படுவேகமாக மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி வியாகுலமேரியின் மகன் இருதயராஜ் வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com