காதலர் தினம்: ஓசூரில் இருந்து ரூ.2 கோடிக்கு ரோஜா பூக்கள் விற்பனை செய்ய முடிவு

14-ந்தேதி காதலர் தினத்துக்காக ஓசூரில் இருந்து ரூ.2 கோடிக்கு ரோஜா பூக்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
காதலர் தினம்: ஓசூரில் இருந்து ரூ.2 கோடிக்கு ரோஜா பூக்கள் விற்பனை செய்ய முடிவு
Published on

ஓசூர்:

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களது காதலிகளுக்கு ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவிப்பது வழக்கம். ஓசூர் ரோஜாக்களுக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி உள்ளது. இதனால் ஓசூர் ரோஜாக்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஆண்டும் வழக்கம்போலவே ரோஜா வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

இது குறித்து ரோஜர் ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர்,பேரிகை ,தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. பசுமைக்குடில் அமைத்து சாகுபடி செய்யப்படும் ரோஜா பூக்கள் குளிர்பதன அறையில் வைத்து பேக்கிங் செய்யப்பட்டு ஏ.சி. வாகனங்களில் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் பிறகு அந்த ரோஜா பூக்கள் விமானம் மூலம் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் , நியூசிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. 14-ந்தேதி வரும் காதலர் தினத்துக்காக ரூ.2 கோடிக்கு ரோஜாப்பூக்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வடமாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்படும்.

காதலர்களிடம் ஓசூர் ரோஜாப்பூக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com