

ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாக விளங்கி வருகின்றது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தில், ரேசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு கத்ரா மலையடிவார முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு செங்குத்தான மலையின் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.
வடஇந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வருகின்றனர்.
இக்கோவிலுக்கு 2015-ம் ஆண்டில் 77,76,604 பக்தர்களும், 2016-ம் ஆண்டில் 77,23,721 பக்தர்களும் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில், இந்தாண்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக 80 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு வருகை தந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 4,54,118 பேரும், பிப்ரவரி மாதத்தில் 3,28,230 பேரும், மார்ச்சில் 6,84,663 பேரும், ஏப்ரலில் 8,00,813 பேரும், மே மாதத்தில் 9,10,843 பேரும், அதிகபட்சமாக ஜீன் மாதம் 11,84,898 பேரும், ஜூலை மாதத்தில் 7,81,433 பேரும், ஆகஸ்ட் மாதம் 6,31,645 பேரும், செப்டம்பர் மாதத்தில் 7,35,596 பேரும், அக்டோபர் மாதத்தில் 6,94,130 பேரும், டிசம்பரில் 4,49,174 பேரும் கொவிலுக்கு வருகை தந்துள்ளதாக கொவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.