

சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து மடிந்த சோக சம்பவத்தை மனக் கொதிப்புடன் கார்டூனாக வரைந்து இணையத்தில் வெளியிட்ட கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்து சிறையில் பூட்டி, ஜனநாயக அடிப்படை உரிமைகளை நசுக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
நெல்லையில் நடந்த கொடூரத்தைச் சித்தரித்த விதத்தில் கார்டூனிஸ்ட் பாலா அவருக்கே உரிய பாணியைக் கடைபிடித்திருக்கிறார். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.