

அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகையின் அருகே சைதாப்பேட்டை சின்னமலை அருகே இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
போராட்டத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேரையும் விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.