புகையிலைப்பட்டியில் வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

புகையிலைப்பட்டியில் வருகிற 7-ந் தேதி நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டை யொட்டி வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புகையிலைப்பட்டியில் வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்
Published on

குள்ளனம்பட்டி:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு தடை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நடைபெற வில்லை. தற்போது இதற்காக தனி சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் மடூர் கிராமம் புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர் செபஸ்தியார் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு 5-ந் தேதி பொங்கல் வைத்து கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 6-ந் தேதி தேர் சப்பர பவனியும் அதை தொடர்ந்து 7-ந் தேதி காலை 9 மணிக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற உள்ளது.

இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு 5-ந் தேதி டோக்கன் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிழக்கு தாசில்தார் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊர் முக்கியஸ்தர்கள் விழா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com