வாடிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வாடிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி சடையாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தா(வயது 55). இவர் கடந்த 24-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டார். அதன்பின் 28-ந் தேதி இரவு 8 மணிக்கு ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் உட்புறம் வெளிப்புறம் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி அலங்கோலமாக இருந்தது. இதில் பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம், 2 பவுன் நகை, வெள்ளி மற்றும் எவர்சில்வர் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது சம்பந்தமாக அவர் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com