வடபழனி அருகே மதுபோதையில் தகராறு- ஓட்டல் மேலாளர் மண்டை உடைப்பு

வடபழனி அருகே ஏற்பட்ட தகராறில் ஓட்டல் மேலாளர் மண்டை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

போரூர்:

ராயப்பேட்டை கப்பூர் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் நேற்று இரவு வடபழனி நூறடி சாலையில் உள்ள ஓட்டல் பாரில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அருகில் மது அருந்தி கொண்டிருந்தவர்கள் மற்றும் அரவிந்த் இடையே தகராறு ஏற்பட்டது. திடீரென ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதைக்கண்ட ஓட்டல் உதவி மேலாளர் ஜெய்முருகன் அவர்களை தடுத்தார். ஆத்திரமடைந்த அரவிந்த் பீர் பாட்டிலால் ஜெய்முருகன் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக ஜெயமுருகனை மீட்டு சிகிச்சைக்காக கே.கே. நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மது போதையில் தகராறில் ஈடுபட்ட அரவிந்தை வடபழனி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com