வடமதுரை அருகே சூதாடிய 5 பேர் கைது

வடமதுரை அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டிபட்டி பகுதியில் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து 5 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் (வயது 37), நாகராஜன் (35), நாகராஜ் (30), பிலாத்தை சேர்ந்த பஷீர்அகமது (51), முருகேசன் (51) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com