மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தம்பதி படுகாயம்

வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தம்பதி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து காயம்
விபத்து காயம்
Published on

வடமதுரை அருகே உள்ள பாகாநத்தம் புதூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மகாலட்சுமியுடன் (38) திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். வடமதுரை தென்னம்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அவர்கள் கடந்தபோது, அந்த வழியே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வடமதுரை போலீசார் மணப்பாறை கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முகமது சித்திக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com