வடகாடு அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

வடகாடு அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வடகாடு:

வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் பகுதியில் வடகாடு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ஆறுமுகம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, வடகாடு தெற்கு முக்கம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக கீழாத்தூர் சாந்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன் (75) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com