உத்தர்காண்ட்: சாலையில் மயங்கி கிடந்தவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற முதல் மந்திரி

உத்தர்காண்ட் மாநில முதல் மந்திரி சாலையில் மயங்கி கிடந்தவரை கண்டதும் காரை நிறுத்தி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தர்காண்ட்: சாலையில் மயங்கி கிடந்தவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற முதல் மந்திரி
Published on

டேராடூன்:

உத்தர்காண்ட் மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் சாலையில் திரும்பி கொண்டிருந்தார். முதல்வரின் வாகனம் லச்சிவாலாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது சாலையில் ஒருவர் மயங்கி கிடந்ததை முதல் மந்திரி பார்த்தார்.

மயங்கி கிடந்தவரை பார்த்ததும் உடனடியாக காரை நிறுத்தினார், சாலையின் மறுபக்கம் மயங்கி கிடந்தவரை அருகில் சென்று பார்த்த முதல் மந்திரி மயங்கி கிடந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தனது அதிகாரிகளுக்கு உத்தரவி்ட்டார்.

முதல் மந்திரி உத்தரவை தொடர்ந்து அவரின் அதிகாரிகள் மயங்கி கிடந்தவரை முதல்வர் பாதுகாப்பு வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மயங்கி கிடந்தவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின்னரே முதல் மந்திரி அங்கிருந்து சென்றுள்ளார்.  

முதல்வரின் கனிவான நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டதோடு, முதல்வரின் புகைப்படங்கள் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com