உத்தரபிரதேசத்தில் மருத்துவர்களின் ஓய்வு வயது 70 ஆக உயருகிறது

உத்தரபிரதேசத்தில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 65-ல் இருந்து 70 ஆக உயர்த்த அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
உத்தரபிரதேசத்தில் மருத்துவர்களின் ஓய்வு வயது 70 ஆக உயருகிறது
Published on

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது முதல், மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மேலும், ஒரு அதிரடி நடவடிக்கையாக மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 65-ல் இருந்து 70 ஆக உயர்த்த அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்தநாத் சிங், “மாநிலத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதிதான் மருத்துவர்களின் ஓய்வு வயதை 70 ஆக உயர்த்தும் இந்த முடிவு” என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com