உத்திரமேரூர் அருகே பாலிஷ்போடுவது போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலிஷ்போடுவது போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திரமேரூர் அருகே பாலிஷ்போடுவது போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை
Published on

காஞ்சீபுரம்:

உத்திரமேரூர் அருகே உள்ள பெருங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி செந்தாமரை. நேற்று மாலை செந்தாமரை மட்டும் வீட்டில் இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய செந்தாமரை 5 பவுன் நகையை அவர்களிடம் கொடுத்தார்.

நகைகளுக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்த போது 2 வாலிபர்களும் குடிக்க தண்ணீர் கொண்டு வரக்கோரி செந்தாமரையிடம் கூறினர்.

இதையடுத்து செந்தாமரை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றார். உடனே 2 வாலிபர்களும் 5 பவுன் நகையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

உத்திரமேரூர் அருகே உள்ள காரணிமண்டபத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவர் மனைவி பிரேமாவுடன் மோட்டார் சைக்கிளில் வயலூர் கூட்டுரோடு அருகே வந்து கொண்டிருந்தார். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென ஸ்டாலின் ஓட்டி வந்த பைக் மீது மோதினார். இதில் ஸ்டாலினும், பிரேமாவும் கீழே விழுந்தனர்.

உடனே அவன் பிரேமா அணிந்திருந்த நகையை பறித்து தப்பி ஓடிவிட்டான். அவன் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து பெருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com