செய்திகள்
உத்தமபாளையம் அருகே மண் கடத்திய கும்பல் மீது வழக்கு
உத்தமபாளையம் அருகே டிப்பர் லாரியில் மண் கடத்திய கும்பல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
உத்தமபாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மண் கடத்தல் அதிகரித்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
டி.மேட்டுப்பட்டி பகுதியில் நின்றிருந்தபோது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அவர்கள் அனுமதியின்றி மண் கடத்தியது தெரியவந்தது. மேலும் போலி அனுமதிசீட்டு வைத்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான அலுவலர்கள் இதுகுறித்து தேவாரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் உரிமையாளர் மணிகண்டன் மற்றும் லாரி டிரைவர் செல்லபாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

