உத்தமபாளையம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

உத்தமபாளையம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

உத்தமபாளையம்:

உத்தமபாளையத்தை அடுத்த ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் செல்லையா (வயது 69). இவர், உத்தமபாளையம்-சின்னமனூர் நெடுஞ்சாலையில் உள்ள நர்சரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். தினமும் இவர் சைக்கிளில் பணிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை, உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் நான்கு வழிச்சாலையில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று, சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்லையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com