கேரளாவில் கந்து வட்டிக்கொடுமை: ஐஸ்கிரீமில் வி‌ஷம் கலந்து தாய்- மகள் தற்கொலை

கேரளாவில் கந்து வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ஐஸ்கிரீமில் வி‌ஷம் கலந்து சாப்பிட்டு தாய்- மகள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் ஒரு மகளுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையாவூரை சேர்ந்தவர் அனித் (வயது 40). ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சொப்ணா (32). ரெடிமேடு கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 11 மற்றும் 3 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கந்து வட்டிக்கு கடன்வாங்கி வியாபாரம் நடத்தி வந்தார். கொரோனாவால் வியாபாரம் நடக்கவில்லை. இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தார். கந்துவட்டிக்காரர்கள் கொடுத்த கடனை கேட்டு அதிகம் நெருக்கடி கொடுத்து கொடுமை படுத்தினர்.

இதனால் மனம் உடைந்த சொப்ணா நேற்று ஐஸ்கிரீமில் வி‌ஷம் கலந்து தனது 2 மகள்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கினர். இவரது வீட்டுக்கு வந்த உறவினர் 3 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு கண்ணூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு தாய் மற்றும் 2-வது மகள் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். மிக ஆபத்தான நிலையில் 11 வயது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள சொப்ணாவின் கணவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கேரளா விரைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com